Coimbatore reels issue

இதெல்லாம் உனக்கு தேவையா கோபி? இன்ஸ்பெக்டர் வாகனம் முன்பு கெத்தாக ரீல்ஸ்.. கொத்தாக தூக்கிய போலீஸ்!

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் வாகனம் மீது அமர்ந்தபடி ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சந்தோஷ் குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்டா ரீல்ஸ் லைக்குக்காக ஆசைப்பட்டு வசமாய் சிக்கிய அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் சிறிய சிறிய வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் தான் ஒரு பிரபலமான நபராக மாற வேண்டும் என பல இளைஞர்கள் இளம்பெண்கள் சமூக வலைதளங்களில் உலாவுவதை பார்க்க முடிகிறது.

டிக்-டாக் வந்த பிறகு திடீர் செலிப்ரட்டிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. ஜிபி முத்து, திருச்சி சாதனா போன்றவர்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். ஆரம்பத்தில் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் என பலரும் பாராட்டிய நிலையில் நாட்கள் செல்லச் செல்ல அது ஆபாசமாக மாறத் தொடங்கியது. இதையடுத்து பல நிறுவனங்கள் அதாவது பேஸ்புக் போன்றவையே சார்ட் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கின.

இதையடுத்து பலரும் தங்கள் வீடியோக்களை அதில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். சமையல் வீடியோக்கள், காமெடி வீடியோக்கள், கணவன் மனைவி நடனம், இசை என தொடர்ந்து அதில் வீடியோக்களை பதிவிட்டு வரும் இளைஞர்கள் இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது ஒரு புறம் இருக்க டாஸ்க் வீடியோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Report