கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் இன்று (செப்டம்பர்.25) நடைபெற்றது.

இதில் பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 82 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 82 மனுக்களில் 71 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 11 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.