கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (செப்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரில் உள்ள பொதுமக்கள் தங்களது சேவைகளை விரைவாக பெறும் வகையில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ என்ற சிறப்புமிக்க திட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற உள்ளது.

அதன்படி கோவை கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட காமராஜர் ரோடு மணி மஹால் திருமண மண்டபத்தில் நாளை (செப்.26) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hello