கோவை மாநகர் மையக்கோட்ட மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
அதன்படி கோவை ரேஸ்கோர்ஸ் அப்துல் ரஹீம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாநகர் மையக்கோட்ட அலுவலகத்தில் நாளை (அக்.16) காலை 11: 00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் கோவை, மாநகர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில், இவ்வலுவலகத்துக்குட்பட்ட மின்நுகர்வோர் மின்வாரியம் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம் என கோவை மாநகர் செயற்பொறியாளர் சிவதாஸ் இன்று தெரிவித்துள்ளார்.