கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (அக்டோபர்.15) கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தடாகம் அடுத்த பொன்னூத்து அம்மன் கோவிலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
