Senthil balagi meets cleaners in Coimbatore

தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மழைநீருடன் குப்பைகள் கழிவு நீர் சேர்ந்து பல்வேறு பகுதிகள் சேரும் சகதியுமாய் குப்பைகளுடன் காட்சியளிக்கின்றன. அதனை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள இன்று (அக்.15) வருகை புரிந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சிவானந்தா காலனி – சாய்பாபா காலனி ரயில்வே பாலத்திற்கு கீழ் மழை நீர் தேங்கும் பகுதிய ஆய்வு செய்தார்.

அப்போது தூய்மை பணிகள் மேற்கொண்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் புகைப்படம் எடுத்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

அந்த ரயில்வே பாலத்திற்கு அடியில் நேற்றும் நேற்று முன்தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்து மழை நீரில் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Report

Leave a Reply