Drunk crime

மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பாட்டில் குத்து; 2 பேர் மீது வழக்கு

கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் விஜய்(வயது 25), கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர்களான பிரதீப்குமார்(24), உதயா விக்ரம்(22) ஆகியோருடன் சேர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பகுதியில் மதுகுடித்து கொண்டு இருந்தார். அப்போது அதில் ஒரு மதுபாட்டிலை எடுத்து விஜய் ஒழித்து வைத்ததாக தெரிகிறது. அதை பார்த்த பிரதீப்குமார் ஏன் இப்படி ஒழித்து வைக்கிறாய் என்று கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரதீப்குமார், உதயா விக்ரம் ஆகியோர் சேர்ந்து மதுபாட்டிலை எடுத்து விஜய்யை குத்தி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் பிரதீப்குமார், உதயா விக்ரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் உள்ளட 3 பேர் மீது ராமநாதபுரம் போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinathandhi

Report

Leave a Reply