தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனையொட்டி மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஏற்கனவே அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மீட்பு உபகரணங்களுடன், பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இப்பணிகளை நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி இன்று (அக்.15) நேரில் பார்வையிட்டு மழைநீர் தேங்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.