வால்பாறை நகராட்சி புதிய ஆணையராக ரகு ராம் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
வால்பாறை நகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்த விநாயகம் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்குப் பதிலாக அரக்கோணம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ரகுராம், வால்பாறை நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் புதிய ஆணையராக ரகுராம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு வால்பாறை நகராட்சித் தலைவர் அழகுசுந் தரவள்ளி, துணைத் தலைவர் செந்தில்குமார் உள்பட வார்டு உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.