Coimbatore to Ooty train 116th year

116-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஊட்டி மலை ரயில்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

தினசரி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்ய ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் இயக்கப்பட்டது. 1908 அக்டோபர் 15 முதல் ஊட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ந் தேதி நீலகிரி மலை ரெயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் பாதையில் 16 குகைகள், 216 வளைவுகள், 250 பாலங்கள் உள்ளன.

ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகளில் மிகவும் நீளமானது என்பது இதன் சிறப்பு அம்சம். நீலகிரி மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் 2005 ஜூலை 15-ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

இந்நிலையில் இன்று (அக்.15) 116-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த ரயிலின் முன் நின்று செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Report

Leave a Reply