கோவை மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகள் நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்க மாநகர போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவையில் உள்ள அனைத்து வகை கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், பலகாரக் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் தீபாவளி சலுகை விற்பனை நடைபெறுகிறது.
இந்நிலையில் கடைவீதிகளில் தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் அன்றாட வேலைபாதிக்காத வகையில் நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் தீபாவளி பண்டிகை வரை கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக நள்ளிரவு 1 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.