Kamal Haasans cinematic journey

நாயகன் மீண்டும் வரான்.. எட்டுத்திக்கும் பயம்தானே.. கமலின் திரைப்பயணம்

தமிழ்சினிமாவில் உலக நாயகன் என்ற ஓர் ஒற்றை வார்த்தை கேட்டால் மக்களின் இதயங்களில் விஸ்வரூபம் எடுத்த அந்த பாலகனின் பெயர் தான் ‘கமல்ஹாசன்’.

இவர் ஏற்படுத்திய திரைப்பயணம் எண்ணற்ற இயக்குனர்களுக்கு சினிமாவின் நுட்பத்தை ஆராய்ந்து அறிய வழிவகுத்து கொடுத்தது. அதிலும் இவர் பயணம் செய்த திரை உலகத்தில், தொழில்நுட்ப ரீதியாகவும் , திரைக்கதை வழியாகவும், தமிழ்சினிமாவை அடுத்தடுத்து கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

இவர் பயணித்த 200 படங்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு திரை அம்சத்திலும் வித்தியாசமான கதாபாத்திரம் , ரசிகர்களை ஈர்க்கும் அவரின் குரல்வளையம் , மெய்சிலிர்க்கும் நடனம், ஆச்சரியமூட்டும் திரைக்கதை, வசன இயக்குனர் என பல துறையில் பல்முத்திரை பதித்திருந்தார் கமல்ஹாசன்.

அவர் நடித்த எண்ணற்ற கதாபாத்திரங்கள் மட்டுமில்ல, தனது பங்களிப்பின் மூலம் துறைக்கு அவர் தந்த விஷயங்கள் தான் அவரைத் திறமையான பன்முக வித்தகராக உருவெடுத்து கொடுத்தது.

பாலகனின் குழந்தை பருவம்

1960-ல் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து மக்களின் இதயங்களில் இடம் பெற்றார். அதிலும் அப்படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலின் காட்சிகளில் அவரின் நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

நாயகன் அவதாரம்

1973-ல் ‘அரங்கேற்றம்’ படத்தில் முதல் முறையாக கமல்ஹாசனுக்கு நாயகனாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. மட்டுமல்ல, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தது. 

இப்படத்தில் கமலின் நடிப்பு கல்வெட்டில் செதுக்கியது போல என்றும் மக்களின் இதயங்களில் நீங்காத பதிவாக இருந்தது. அதுதான் ரஜினிகாந்துக்கும் முதல் படம். கே.பியின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’,படம் கமலின் கதாபாத்திரம் அன்றைய இளைஞர்களின் வேலையில்லா தீண்டாத்தை பற்றி அற்புதமாக காட்சியமைப்புகளில் நடித்து நம்மை ஆச்சிரியப்படுத்தினார். 

அவரின் லுக் வறுமையில் இருக்கும் இளைஞனை போல பிரதிபலித்தது. அதிலும் அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை சிந்திக்க வைத்தது. இதே போல் ‘புன்னகை மன்னன்’, ‘மரோசரித்ரா’ போன்ற பல மறக்க முடியாத படங்களில் கமல்ஹாசன் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை வென்று எடுத்தார்.

கமர்ஷியல் படங்கள் மூலம் தடம்

1980களில் கமல்ஹாசனின் படங்கள் தொடர் தோல்வி கண்டன. 1980-ல் பார்வைக் குறைபாடு உள்ளவராக அவர் நடித்த ‘ராஜ பார்வை’படம் ஓடவில்லை. ஆனால் சினிமா வியாபாரத்தில் தன் பெயரை மீண்டும் நிலை நிறுத்த கமர்ஷியல் சினிமாவில் தடம் பதித்து அதில் வெற்றி கண்டார்.

கமர்ஷியல் படம் ‘சகலகலா வல்லவன்’, ‘காக்கி சட்டை’ போன்ற படங்கள் பக்கா சூப்பர் ஹிட் கமர்ஷியல் படங்காளக உருவாயின இதே வரிசையில் ரியலிசம் படமான ‘மூன்றாம் பிறை’ கமலின் நடிப்பு , சுட்டித்தனமான செயல்கள் தேசிய விருதுக்கு வித்திட்டது. அதிலும் கமல் மற்றும் ஶ்ரீதேவி ஜோடி சேர்ந்தால் பட்டித்தொட்டித் எங்கும் வெற்றி சத்தமாக தான் அமையும்.

கேங்ஸ்டார் அவதாரம்

1987-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘நாயகன்’ அவரை புதிய உயரங்களுக்கு இட்டுச் சென்றது. அது வரை காதல் நாயகனாக இருந்து கமலை ரியல் அதிரடி கலந்த கேங்ஸ்டாராக மாற்றி, உலகம் முழுவதும் விசில்கள் தெறித்தன. 

குறிப்பாக இப்படத்தில் பேசும் வசனங்கள் அன்றைய தியேட்டர்களில் ரசிகர்கள் தொண்டை வீங்கும் அளவிற்கு கத்திக்கொண்டே இருந்தன. இளையராஜாவின் பின்னணி இசையும் கமலின் யதார்த்தமான நடிப்பும் படத்தை உலக தரத்திற்கு கொண்டு சென்றன. 

தென்பாண்டி சீமையிலே பாடல் அன்றைய தியேட்டர்களில் ரசிகர்களை கண்ணீரில் மூழ்க வைத்து அதிலிருந்து அவரது எல்லா படங்களிலும் அவரின் தனி முத்திரை இருந்தது. ‘அபூர்வ சகோதரர்கள்’, கிரேஸி மோகனுடன் இணைந்து, நிமிடத்துக்கு ஒரு முறை சிரிக்க வைத்த மறக்க முடியாத ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட படங்களில் கதாசிரியராகவும் அவர் பணியாற்றினார்.

‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்துக்குப் பிறகு ’குணா’. காதல் காமெடி ’சிங்காரவேலன்’ படத்துக்குப் பிறகு மறக்க முடியாத ’தேவர் மகன்’. ’இந்தியன்’, ’குருதிப்புனல்’ படங்களைத் தொடர்ந்து ’அவ்வை சண்முகி’, ’காதலா காதலா’ போன்ற காமெடிப் படங்கள். துன்பியல் நாடகமான ’மகாநதி’ படத்தைத் தொடர்ந்து கல்லூரிக் கதையான ’நம்மவர்’, நகைச்சுவைப் படமான ’சதி லீலாவதி’ படங்கள் வந்தன.

அந்த தசாப்தத்தின் முடிவு கமல்ஹாசனின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றைப் பார்த்தது. ’ஹே ராம்’ படத்தின் தோல்வியையும் தாண்டி மற்றுமொரு பெரிய பட்ஜெட் படமான ’ஆளவந்தான்’ படத்தில் அவர் சினிமாவின் தரத்தை இன்னும் உயர்த்தினார். பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியான இந்தப் படம் படுதோல்வி அடைந்தது வணீக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஆளவந்தான் படம் தமிழ்மக்களுக்கு புரியாத படமாகவே அமைந்தது.

இதில் சில புதிய தொழில்நுட்பங்களை வெளிபடுத்தி தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றும், மக்களிடத்தில் அது ஏமாற்றத்தை கொடுத்தது. 

கலக்கல் காமெடியில் கமல்

2000களில் கலக்கலான நகைச்சுவைப் படங்களான ’பம்மல் கே சம்பந்தம்’, ’பஞ்சதந்திரம்’, ’வசூல் ராஜா எம்பிபிஎஸ்
படங்கள் நமக்கு என்றைக்கும் சலிப்பு தட்டாத படமாக இருக்கும் அதிலும் இன்றைய சினிமாக்களில் வெளிபடும் டார்க் காமெடி அன்றைய கமல் படங்களில் நம்மை வயிறுமுட்ட சிரிக்க வைத்து தியேட்டர்களில் மகிழ்ச்சிப்படுத்தியது.

பெரிய பட்ஜெட் சூப்பர் ஹிட் படங்களான ’வேட்டையாடு விளையாடு’, ’தசாவதாரம்’ உள்ளிட்ட படங்கள் கமலின் நடிப்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தன ஒரு பக்கம் துப்பாக்கி மற்றொரு பக்கம் வித்தியாசமான தோற்றங்கள் ஒரு கலக்கு கலக்கி உலக நாயகன் பட்டத்திற்கு அவதரித்தார்.

எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரம் இருந்தாலும் அதை சர்வ சாதாரணமாக நடித்து தமிழ்சினிமாவின் அழிக்க முடியாத நாயகனாக உருவெடுத்தார். விஸ்வரூபம்’ படத்தின் பிரச்சினைகளுக்குப் பிறகு கமல்ஹாசன் திரைத்துறையில் சற்று அமைதியாகிவிட்டார். ’உத்தம வில்லன்’, ’தூங்காவனம்’ என இரண்டு படங்களை மட்டுமே எடுத்து அதில் படுதோல்வியை சந்தித்தார்.

பற்றவைத்த தீப்பொறி

தன் திரைப்பயணம் சற்று மோசமாக இருந்து விட உலக நாயகன் ஒரு தரமான படத்தை கொடுக்க மாட்டரா என்ற நிலையில் கமலின் தீவிர ரசிகன் லோகேஷ் கனகராஜ் கமலின் திரைப்படத்திற்கு ஒரு நெருப்பை பற்ற வைத்தார்! அந்த நெருப்பு தான் விக்ரம்!

கமலை ஒரு புதுவிதமான ஸ்டைலில் கொண்டு வந்து நான் வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்ற வரிகளுக்கேற்ப விக்ரம் படத்தை உலக தரத்திற்கு கொண்டு சென்றார் அதிலும் நாயகன் மீண்டும் வரான் என்ற பாடலில் கமலின் நடிப்பு , ஸ்டைலிஸ் தியேட்டர்களில் ரசிகர்கள் விசில் அடித்து ஆட்டம் போட வைத்தன. சில ரசிகர்கள் கமலுக்கு பால் அபிஷேகம் செய்து பட்டித் தொட்டி எங்கும் விக்ரம் என்ற பெயரை பேசும் பொருளாக மாற்றி கொடுத்தன.

சர்ச்சைகளின் கமல்

வலது சாரி, நடுநிலையாளர்கள், இடது சாரி என அனைவரும் கமல் நடித்த தலைச்சிறந்த படங்களான தேவர்மகன், விருமாண்டி, ஹேராம் எப்போதுமே தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது.

கமலின் ’விருமாண்டி’ , ’விஸ்வரூபம்’ ஆகிய படங்கள் தலித் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாயின தனக்கான கருத்துச் சுதந்திரம் கிடைக்காவிட்டால் நாட்டை விட்டே வெளியேற வேண்டியிருக்கும் என்று விரக்தியடைந்த கமல்ஹாசன் அறிவித்தார்.

 

Report

Leave a Reply