கோவையில் அமைந்துள்ள மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனம், மொத்தம் 16 பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
- மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) – 8 இடங்கள்
- லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) – 1 இடம்
- டெக்னீசியன் (கள/ஆய்வகம்) – 3 இடங்கள்
- டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (கள/ஆய்வகம்) – 4 இடங்கள்
கல்வித் தகுதி:
- MTS பணிக்கு: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- LDC பணிக்கு: 12ஆம் வகுப்பு (60% மதிப்பெண்களுடன்)
- டெக்னீசியன் பணிக்கு: அறிவியல் பட்டப்படிப்பு
மாத ஊதியம்:
- MTS: ரூ.18,000
- LDC: ரூ.19,900
- டெக்னீசியன்: ரூ.21,700
- டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: ரூ.29,200
வயது வரம்பு:
- டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 21-30 வயது
- டெக்னீசியன்: 18-30 வயது
- MTS & LDC: 18-27 வயது
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்:
- SC/ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- மாற்றுத்திறனாளிகள்: 10 ஆண்டுகள்
விண்ணப்பிக்க வேண்டிய முறை:
- இணையதளம்: https://ifgtb.icfre.gov.in
- விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 08.11.2024
- கடைசி நாள்: 30.11.2024
தேர்வு முறை எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்கள் கோவையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும்.