கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமிற்கு வந்த வெளிமாநில இளைஞர்கள், தங்குவதற்கு இடமில்லாமல், சாலையில் படுத்து உறங்கிய அவலம் அரங்கேறியுள்ளது.
இந்த ஆள்சேர்ப்பு முகாமில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், முகாம் காலை 5 மணிக்கு தொடங்கியது.
இதில் கயிறு ஏறுதல், ஓட்டப் போட்டிகள், உயரம் அளவிடுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. முகாமில் கலந்து கொள்ள முந்தைய நாள் இரவே கோவை வந்த வெளிமாநில இளைஞர்கள், தங்குவதற்கு இடமின்றி அலைமோதினர்.
பின்னர், பாலசுந்தரம் சாலையில் வரிசையாகப் படுத்திருந்தனர். இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விதியில் படுத்திருந்த இளைஞர்களை அழைத்துச் சென்று, லட்சுமி மில்ஸ் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க ஏற்பாடு செய்தனர்.