Tamil cinema news updates

Your Ultimate Tamil Cinema Feed | 11 Jan⚡

வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் அப்டேட்!!

அருண் குமார் இயக்கத்தில் வெளிவந்த சித்தா படம் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து வீர தீர சூரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் காளி என்ற கேரக்டரில் விக்ரம் நடித்துள்ளார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் பொங்கல் தினம் முன்னிட்டு படம் வெளியாக இருந்தது ஆனால் சில காரணங்களால் படம் தள்ளி போனது.

முன்னதாக ஜனவரி 24ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இயக்குனர் அருண் குமார் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இப்படம் ஜனவரி 30 அல்லது 31ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கேம் சேஞ்சர் படத்திற்காக கோடியில் சம்பளம் வாங்கிய கியாரா அத்வானி!!

தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, கியாரா அத்வானி எனப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.
300 கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் 3 வருடங்களாக இப்படத்தை எடுத்து வந்தனர். அதனால் இப்படத்தின் பட்ஜெட் மட்டும் 450 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் கியாரா அத்வானி, கேம் சேஞ்சர் படத்தில் நடிக்க 7 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விக்ரமுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை!! யார் தெரியுமா?

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்திற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் கதநாயகியாக நடிக்க நடிகை சாய் பல்லவியை அணுகியுள்ளனர். ஆனால், தற்போது கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இப்படத்தின் வாய்ப்பை சாய் பல்லவி நிராகரித்து விட்டார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Report

Leave a Reply