குயிலின் குரல் என்று பெயர் பெற்று, இரவு நேரங்களில் ‘ நினைக்கு தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாத’ குரலால் நம்மை அமைதி வழிக்கு எடுத்து சென்ற அந்த இளவரசி பெயர் தான் ‘சுசீலா’.
இந்திய மொழிகளில் மகத்தான சாதனைகளை படைத்த இந்த இளவரசி தன் சுண்டி இழுக்கும் குரலால் 5 தேசிய விருதுகள், 10-க்கும் மேற்பட்ட மாநில விருதுகள், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்.. அனைத்துக்கும் மேல் கின்னஸ் சாதனை படைத்து ரசிகர்களின் இதயத்தில் ரோஜா பூவாக மலர்ந்தார் . இவரின் பெயர் பட்டித் தொட்டி எங்கும் எதிரொளித்தன.
அந்த காலத்தில் என் வேலை வெறும் பாட்டு பாடறது மட்டும்தான்.. அதனால தான் நான் எத்தனை பாட்டு பாடினேன்னு ” என்று தெரியவில்லை என சொல்லும் சுசிலாவின் தொழில் பக்தியில்தான் எத்தனை எத்தனை ஈடுபாடு!
தெலுங்கை தாய்மொழியாக வைத்து கொண்டு, சுத்தமான தமிழில் எப்படி சுசிலாவால் பாட முடிந்தது? தமிழை இலக்கியமாக பேசுவதற்கும், நயத்துடன் பாடுவதற்கும், சுசிலாவின் பால பாடம்தான். மாத சம்பளத்தில் ஏவிஎம்மில் வேலை பார்த்தபோது, மெய்யப்ப செட்டியார் தமிழ் உச்சரிப்பு கற்றுக்கொடுக்க சுசிலாவுக்கு தமிழில் ஆர்வம் வர தொடங்கின. அந்த சமயத்தில் கர்நாடக இசை இளவரசிகளான பி.லீலா, எம்எல் வசந்தகுமாரி ஆகியோரின் திரைவானில் உச்சத்தில் இருந்தும் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட தருணத்தில் தான் தென்றலென நடுவே பூவாக மலர்ந்தார் பி.சுசிலா.
கணீர் என்ற வெண்கலக்குரல்களுக்கு இடையில் மெல்லிய கீற்று ஒன்று சன்னமாக ஒலிக்க.. தேனினும் இனிமையாக.. மனதை வருட தொடங்கியது! சுசீலாவின் மெல்லிய குரல். இசையமைப்பாளர்கள் என்ன உணர்வினை எதிர்பார்க்கிறார்களோ, அதை உள்வாங்கி கொண்டு அந்த பாடலை தன் இனிமையான குரல் வளையத்தால் பாடலை மெய்சிலிர்க்க வைப்பார் அதிலும் இவரின் குரல் அந்த பாடலின் நயத்தை தேனாக மாற்றி நம் காதுகளில் செவிசாய்க்க தெளித்துவிடுவார் சுசிலா… அதனால்தான் பின்னணி பாடகிகளில் இருந்து முன்னணி பாடகி என்ற இடத்தை வெகு சீக்கிரத்தில் உட்கார்ந்துகொண்டார்.
தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், வீரம், ஏக்கம், ஊடல், குத்து, காதலின் மயக்கம் , என ஒவ்வொன்றிலும் ராகத்தின் எதுகை மோனை விட செவ்வியல்தன்மை இவரது பாடல்களில் தென்பட்டன . நாம் எங்கு பயணித்தாலும் , எந்த நிலையில் இருந்தாலும் சுசிலாவின் குரல் கேட்டாலே கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கும் போது ஏற்படும் இன்பத்தை விட இவரின் குரல் ஏற்படுத்தும் இன்பம்
நம் செவிகளினூடே நுழைந்து நெஞ்சை தேனாய் நனைத்துவிடும்.
அன்றைய இலங்கை வானொலி பிரியர்களை பிரமிக்க செய்து மெல்லிய குரல் என ஆங்காங்கே பேசப்பட்டது. உச்சஸ்தாயி-கீழ்ஸ்தாயி ஏதுவாக இருந்தாலும் எனக்கென்ன, என்று அதனை தன் முகபாவனையில் காட்டிக் கொள்ளாமல், உதட்டை தவிர உடலில் வேறெந்த பாகமும் அசையாமல் பாடுவதே சுசிலாவின் சிறப்பு அம்சம். அதிலும் எஸ்.எம்.எஸ் தொடங்கி, ரகுமான், வரை நெடிய பயணத்தை இனிமையாக முடித்து கொடுத்துள்ளார் சுசிலா. அவரது பாடல்கள் அனைத்தும் ஒட்டுமொத்த ரசிகர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி இவரின் குரலுக்கு அடிமையாக்கியது.
இசைஞானியுடன் கைகோர்த்த இளவரசி
இசைஞானியுடன் கைகோர்த்த தன் மெல்லிய குரலால் அரும்பாகி மொட்டகி என்ற பாடலில் ரசிகர்களின் இதயங்களில் அரும்பாக மாறினார்.இதன் பின்னர் தன் மெல்லிய குரலில் ராசாத்தி மனசுல , ஆசையில பாத்தி கட்டி என பாடல்களால் அன்றைய வெகுஜன மக்களை தன் குரலால் மூழ்கடித்தார் அதிலும் இந்த பாடல்கள் எல்லாம் நாம் கிராமத்து பஸ்ஸில் கேட்கும் போது ஆஹா என்ன குரல்யா என்றும் அந்த பாடலின் காலக்கட்டத்திற்கு நம்மை கொண்டும் செல்லும்.
அடுத்ததாக பூ பூக்கும் வாசம் பூவாசம், பேசக்கூடாது ஆகிய பாடல்கள் கிளாசிக் உலகத்திற்கு கொண்டு சென்று நம் நாடி நரம்புகளை சுண்டி இழுக்கும் சுசீலாவின் மெல்லிய குரல். இப்பாடல்கள் அன்றைய காலத்தில் வீட்டுக்கு ஒரு டிவி சேனலில் கண்டு ரசித்ததற்கு இந்த இளவரசியின் குரல் முக்கிய பங்கு வகித்தது . இயற்கையை தன் குரலால் அழுகுப்படுத்தி இனிமை வற்றாத குரல் அது.. இயற்கையை வணங்கக்கூடிய குரல் அது… எண்ணற்ற ஆண்டுகள் கடந்தாலும் பழுதாகாத, கரைந்துபோகாத குரல் அது.. உணர்ச்சிக்குரலில் பாவங்களை வெடிக்கும் திறன் சுசிலாவுக்கு மட்டுமே சொந்தம். அவர் ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ வேண்டும் என்பதே அவரது இசை அடிமைகள் ஒவ்வொருவரின் நெஞ்சார்ந்த விருப்பம்.
காற்றுக்கு அழிவில்லை… மொழிக்கும், இசைக்கும் அழிவில்லை… சுசிலாவின் குரலுக்கும்!