கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்திற்கு தொடர்ந்து 3 முறை வராததால் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் மீது கோவை மேயர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
அவரை மேயர் சஸ்பெண்ட் செய்த நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று, பிரபாகரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக கோவை மேயர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.