ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) எனப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பதிவு செய்யும் பணிகள் இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது.
இதில் எப்படி இணைவது என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இந்த மாதம் வெளியிடப்படும். புதிய சுகாதார அட்டைகளை வழங்குதல்: தகுதியுள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் திட்டத்தின் பலன்களை பெற புதிய தனித்தனி அட்டை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம் குறித்து இங்கே பார்க்கலாம்:
- திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் கவர் ஆகும். முன்னதாக, AB PM-JAY திட்டத்தின் கீழ் 40% மக்கள் மட்டுமே பயன் அடைந்தனர்.
- இந்த திட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இப்போது,இந்த விரிவாக்கம் மூலம் கூடுதலாக 6 கோடி நபர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் நாடு முழுக்க 4.5 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளனர்.
- 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொரு பயனாளிகள் கண்டறியப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவார்கள். இவர்கள் இந்த திட்டத்தின் கீழ் புதிய ஹெல்த் கார்டைப் பெறுவார்கள்.
- இந்த திட்டத்தின் கவரேஜ் ஒரே குடும்பத்திற்குள் பகிரப்படும். ஒரே குடும்பத்தில் பல மூத்த குடிமக்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெற்றிருந்தால், ₹5 லட்சம் கவரேஜ் அவர்களுக்குப் பிரிக்கப்படும். அதாவது இரண்டு வயதானவர்கள் இருந்தால் அவர்கள் தங்களுக்குள் இன்சூரன்ஸ் தொகையை பிரித்துக்கொள்ளலாம்.
- மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS), அல்லது ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட மூத்த குடிமக்கள் விரிவாக்கப்பட்ட AB PM-JAY திட்டத்தை தேர்வு செய்ய முடியாது.
- ஏற்கனவே உள்ள திட்டத்தை கைவிட்டால் விரிவாக்கப்பட்ட AB PM-JAY திட்டத்தை தேர்வு செய்யலாம்.
- அதே சமயம் தனியார் காப்பீடு உள்ளவர்கள் அல்லது ஊழியர்களின் மாநில காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் அதோடு சேர்த்து விரிவாக்கப்பட்ட AB PM-JAY திட்டத்தை தேர்வு செய்யலாம்.
- இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டம் ₹3,437 கோடி செலவில் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் அல்ல.
- இதற்கு மாநிலங்கள் 40% செலவுகளை ஏற்கின்றன. மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 90% செலவை மத்திய அரசு ஏற்கும். தேவை அதிகரிக்கும் போது,கவரேஜ் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- விரைவில் வறுமையால் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த 70 வயதுக்கு குறைவானவர்களும் இந்த திட்டத்தின் கீழ் இணைய முடியும். அதற்கான விரிவாக்க பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.
- 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களும் இந்த திட்டத்தின் கீழ் ₹5 லட்சம் சுகாதார காப்பீட்டிற்கு தகுதியுடையவர்கள்.
- தனியார் சுகாதார காப்பீடு வைத்திருப்பவர்களும் பயனடையலாம்: தனியார் உடல்நலக் காப்பீட்டு கொண்ட மூத்த குடிமக்களும் தங்களின் தற்போதைய திட்டத்தை நீக்காமல் இதை பயன்படுத்த முடியும்.
- ஆயுஷ்மான் பாரத் குடும்பங்களுக்கான கூடுதல் கவரேஜ்: ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ள மூத்த குடிமக்கள் தங்கள் உடல்நலக் காப்பீடு பெரும்பட்சத்தில் அவர்கள் கூடுதலாக ₹5 லட்சம் ரீசார்ஜ் பெற முடியும். குறிப்பாக தங்கள் சொந்த உபயோகத்திற்காக, அதை அவர்கள் பயன்படுத்தலாம். இந்த தொகையை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை.
திட்டம் கவனம்: மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவின் பொது சுகாதாரத் துறையில் முக்கியமான புரட்சியாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் வருமான அளவிலான கட்டுப்பாடுகள் இல்லாமல் கொண்டு வரப்பட்டு உள்ளது. மூத்த குடிமக்களுக்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் என்ன மாதிரியான வருமானம் வாங்கினாலும் , இந்த இன்சூரன்ஸ் திட்டம் அவர்களுக்கு அளிக்கப்படும்.