பாரதிய ஜன சங்கத்தில் மூத்த தலைவர் திரு. பண்டித் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் இன்று (செப்.25) கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர மாவட்ட தலைவர் திரு. J. ரமேஷ் குமார் அவர்களின் ஆலோசனைப்படி கணபதி மண்டலில் பா.ஜ.க மாநில பொருளாளர் திரு. Sr. சேகர் அவர்கள் முன்னிலையில் கணபதி மண்டல் தலைவர் திரு.சிவக்குமார் அவர்களின் தலைமையில் கோவை மாநகர மாவட்டம் கணபதி மண்டலின் அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர் சேர்க்கையும், பா.ஜ.க உறுப்பினர் என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.
மேலும் இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. சுப்பையன் அவர்களும் மாவட்டச் செயலாளர் திரு.கணபதி துரை உள்பட மாவட்ட நிர்வாகிகளும் மண்டல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.