hang

படிப்பிற்க்கேற்ப வேலை கிடைக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 23). முதுகலை பட்டதாரியான இவர் வேலை தேடி கோவை வந்தார். பின்னர் அவர் கோவை பிள்ளையார்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து ஒரு ஆடிட்டர்டம் உதவியாளராக வேலை செய்து வந்தார். ஆனால் அவருக்கு தான் படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது.

அவருடன் படித்த நண்பர்கள் நல்ல வேலையில் சேர்ந்து அதிகளவில் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

புகார்செய்

மறுமொழி இடவும்