disabled

மாற்றுத்திறனாளிகள் Ph.D ஆராய்ச்சி படிப்பிற்கு ரூ. 1 லட்சம் – கோவை ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை மூலம் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தும் விதமாக முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை (Chief Minister Research Fellowship) 2024-2025 முதல் முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D) பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ/மாணவியர்களுக்கு ரூ.100000/- வீதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

  • முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D) பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்
  • வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை
  • இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும்

உதவித்தொகை வழங்கும் முறை

ரூ.1 இலட்சம் ஊக்கத்தொகையானது ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தவுடன் முழுவதுமாக வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்

ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்:

  1. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை
  2. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID)
  3. ஆதார் அட்டை நகல்
  4. வங்கிக்கணக்கு புத்தக நகல்
  5. முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்பிற்கான ஆய்வறிக்கை
  6. வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரம்
  7. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டதற்கான இருப்பிடச்சான்று (Nativity Certificate)

விண்ணப்பிக்கும் முறை

மேற்படி, தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

புகார்செய்

மறுமொழி இடவும்