மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை, வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ளதால் மலை ரயில் சேவை நாளை மற்றும் நாளை மறுதினம் (அக்.16, 17) உள்ளிட்ட இரு தினங்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட நிர்வாகம் இன்று (அக்.15) அறிவித்துள்ளது.