Chain snatching in rathinapuri

ரத்தினபுரியில் வீடு புகுந்து நகை பறிப்பு

சம்பவத்தன்று கோவை ரத்தினபுரி தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் 58 வயதான மனைவி லட்சுமி, வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தண்ணீர் கேட்பது போல வந்த மர்ம நபர் திடீரென லட்சுமி கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி, நகையை பறித்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்