கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் இன்று (ஜனவரி.20) வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல்" பற்றிய பயிற்சி 22.01.2025 மற்றும் 23.01.2025 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
பயிற்சியில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார் நிலைபானம், ஊறுகாய், ஊறுகனி, பழப்பார் மற்றும் பழ மிட்டாய் ஆகியவற்றை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் ₹1,770 (₹1,500 + GST 18%) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

நடப்பிடம்:
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003.
பேருந்து நிறுத்தம்:
வாயில் எண்.7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர் - 641003.
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003.
தொலைபேசி எண்கள்: 94885-18268, 04226-611268
மின்னஞ்சல்: phtc@tnau.ac.in