Somasundaram

கோவை கடன் வசூல் தீர்ப்பாய நீதிபதியாக சோமசுந்தரம் நியமனம்

கோவை: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்திடம், வாடிக்கையாளர்கள் பெறும் கடனை திருப்பி செலுத்த தவறும் பட்சத்தில், வராக்கடன் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, கோவையில் கடன் வசூல் தீர்ப்பாயம் (டி.ஆர்.டி.,) செயல்பட்டு வருகிறது. தீர்ப்பாய நீதிபதி ஓய்வு பெற்றதால், கடந்தாண்டு மே முதல் நீதிபதி பணியிடம் காலியாக இருந்தது.

மதுரை தீர்ப்பாய நீதிபதிக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கோவை கடன் வசூல் தீர்ப்பாய நீதிபதியாக, சோமசுந்தரம் நேற்று ஜன.20 நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்செய்

மறுமொழி இடவும்