கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.16க்குட்பட்ட டி.வி.எஸ். நகர் காமராஜபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், இன்று (ஜனவரி.21)
நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்தும், தாய் சேய் நலம் குறித்தும், மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.
உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் திரு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மாமன்ற உறுப்பினர் திரு.தமிழ்செல்வன், உதவி நகர திட்டமிடுநர் திரு.மகேந்திரன், உதவி பொறியாளர் திரு.ராஜேஸ் வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.