Prisoner Who Escaped

சென்னை புழல் சிறையிலிருந்து விடுப்பில் வந்து தலைமறைவான கைதி: 6 மாதங்களுக்குப் பிறகு கோவையில் கைது

சென்னை புழல் சிறையிலிருந்து விடுப்பில் வந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி ஜாகிர் உசேன், சூலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் போக்ஸோ உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஆயுள் தண்டனை பெற்ற ஜாகிர் உசேன், தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி விடுப்பில் வந்து தலைமறைவாகி இருந்தார். சூலூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடும்படி நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக மூன்று நாள்கள் மட்டுமே காவல் நிலையத்தில் வந்த கையெழுத்திட்டுவிட்டு தலைமறைவாகினார்.


இதனை அடுத்து சூலூர் போலீசார் 6 மாத காலம் தீவிரமாக தேடி வந்த நிலையில், கோவை காந்திபுரத்தில் பதுங்கியிருந்த அவரை நேற்று ஜன.21 கைது செய்தனர். பின்னர் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்