Long Mountain Cobra

சிறுமுகை அருகே குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வீடியோ வைரல்

கோவையில் குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்புவின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கோவை, மேட்டுப்பாளையம், சிறுமுகை முத்துசாமி திருமண மண்டபம் அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மலைப் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை நேற்று ஜன.21 அப்பகுதி மக்கள் கண்டனர். பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் வனச்சரகர் மனோஜிற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் குணா மற்றும் வனத் துறையினர் அங்குள்ள புதரில் பதுங்கி இருந்த சுமார் 8 அடி நீளம் உள்ள மலைப் பாம்பை நீண்ட நேரம் போராடி லாவகமாக பிடித்தனர்.

இதனை அடுத்து பிடிபட்ட மலைப் பாம்பை பெத்திக்குட்டை வனப் பகுதியில் விடுவித்தனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்