கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.87க்குட்பட்ட குனியமுத்தூர் ராஜு நகர் பகுதியில் பூங்கா அமைக்கும் பணிகளையும், ராஜ கோபால் நகர் பகுதியில் பூங்கா பராமரிக்கும் பணிகளையும் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இன்று (ஜனவரி.22) ஆய்வு மேற்கொண்டார்.
இதில் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், பகுதி கழக செயலாளர் குனியமுத்தூர் லோகு, மண்டல குழு தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், மாமன்ற உறுப்பினர் உதயநிதி பாபு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்