கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இன்று (ஜனவரி.22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் "அரிசி மற்றும் சிறுதானியங்கள்" பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர், இறுதி ஆண்டு பயிலும் பட்டதாரி மாணவர்கள், பிற பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள், பங்கு பெறலாம்.
இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வரும் பிப்ரவரி 05 மற்றும் 06, 2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் ரூபாய்.3,540/- பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன.
ேலும் பதிவுக்கு மின்னஞ்சல்: business@tnau.ac.in, தொலைபேசி எண்: 99949-89417/82206-61228, அலைபேசி எண்: 0422-6611310 தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.14:15 business@tnau.ac.in, phone numbers: 99949-89417/82206-61228, or the university’s office at 0422-6611310.