Coimbatore Police

கோவை ரேஸ் கோர்ஸில் இருசக்கர வாகனங்களில் இருவரும் தலைக் கவசம் அணிந்து பயணித்தோருக்கு 1 லிட்டர் பெட்ரோல் பரிசு வழங்கப்பட்டது

கோவை மாநகரப் பகுதியில் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க போக்குவரத்துப் பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

விபத்துகளில் தலைக்காயம் ஏற்படுவதாலேயே அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால், தலைக் கவசம் அணிந்து வாகனத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுவதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தலைக் கவசம் அணியாமல் வாகனத்தை இயக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிலையில், இருசக்கர வாகனங்களில் வாகனத்தை ஓட்டுபவரோடு, பின்புறம் அமர்ந்திருப்பவரும் தலைக் கவசம் அணிந்திருந்தால், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தலா 1 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்க போக்குவரத்து போலீசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

On January 22, the Race Course Traffic Regulation Unit conducted an inspection near the Avinashi Road MGR statue. During this drive, they distributed petrol coupons for 1 liter to helmet-wearing riders and their pillion passengers. A total of 50 riders benefited from this initiative.

புகார்செய்

மறுமொழி இடவும்