Protecting Thirupparankundram

திருப்பரங்குன்றம் மலையை மத அடிப்படைவாத செயல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஜனவரி.23) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழர்களுக்கு 'தமிழ்' எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு 'முருகப் பெருமான்' முக்கியம் எனக் குறிப்பிட்டார். அவர் 'தமிழ்க் கடவுள்' என அழைக்கப்படுவதற்கே காரணம், அவரது பெயர் ஒவ்வொரு தமிழர் குடும்பத்திலும் ஒரு நபருக்கு இருக்கும் அளவுக்கு தமிழர் வாழ்வியலோடு பொருந்தியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் மிகமிக முக்கியமானது திருப்பரங்குன்றம் மலை, இதுவே முதலாவது படைவீடு. மதுரை அருகே உள்ள இத்திருக்கோயிலை, நக்கீரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட பலர் தங்களது பாடல்களில் புகழ்ந்துள்ளனர்.

ஆனால், இடைக்காலத்தில் மலையில் தர்கா அமைந்ததை காரணமாகக் காட்டி, சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் மலையை தங்களது சொத்தாகக் கோரியும், கார்த்திகை தீபம் போன்ற வழிபாட்டு நிகழ்வுகளை தடுக்கும் முயற்சிகளும் மேற்கொண்டுள்ளன. தற்போது நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தீபம் ஏற்ற அனுமதி கிடைத்துள்ளது.

சமீபத்தில், இஸ்லாமிய அமைப்புகள் மலையில் பலியிட்டு விருந்தினை நடத்த திட்டமிட்டதை காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதற்கு பிறகும், ஐயூஎம்எல் எம்பி நவாஸ் கனி, திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிட்டு முருக பக்தர்களின் மனதை புண்படுத்தும் முயற்சியை செய்துள்ளார்.

இது ஒரு தீவிர உள்நோக்கத்துடன் மத மோதல்களை உருவாக்கவும், முருக பக்தர்களின் புனிதத்தைக் கெடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட செயலாகும். தமிழக அரசு இதனை உடனடியாக தடுத்து, முருகனின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

திமுக அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாது என கூறிய அவர், இந்த பிரச்னைகளில் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் முருக பக்தர்கள் தகுந்த பதிலை அளிப்பார்கள் என எச்சரித்தார்.

புகார்செய்

மறுமொழி இடவும்