Dual Type Plastic

கோவை 63வது வார்டில், பணிகள் குழு தலைவர் சார்பில் இருவகை பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.63க்குட்பட்ட இராமநாதபுரம், இராமலிங்கஜோதி நகரில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், மாநகராட்சி ஆணையாளர் திரு. மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், பணிகள் குழு தலைவர் திருமதி. சாந்திமுருகன் அவர்களின் சொந்த நிதியிலிருந்து ரூ.26,000/- மதிப்பீட்டில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை வகைப்படுத்தி தரம் பிரிப்பதற்கான 40 எண்ணிக்கைகள் கொண்ட இருவகை பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளை இன்று (ஜனவரி.24) தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.

உடன் உதவி ஆணையர் திரு. செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் திரு. குணசேகரன், சுகாதார ஆய்வாளர் திரு. ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்