Man Arrested 2

பெண்ணிடம் ₹10 லட்சம் மோசடி செய்த நபர் கைது

Man Arrested for Defrauding Coimbatore Woman of ₹10 Lakh
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் ரித்திகா என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர் ₹10 லட்சம் மோசடி செய்துள்ளார். கடந்த 18.11.2024 அன்று, தன்னை FedEx கூரியர் ஊழியர் எனவும், ரித்திகாவின் அடையாளத்தை பயன்படுத்தி சில பார்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் போதைப் பொருள்கள் மற்றும் சட்ட விரோத பொருட்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், புகார்தாரரின் வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டுமென கூறி மும்பை சைபர் கிரைம் அதிகாரிகளுடன் ஸ்கைப் வீடியோ அழைப்பில் இணைய உத்தரவு அளித்துள்ளார்.

பின்னர், புகார்தாரரின் வங்கி கணக்கிலிருந்த ₹10 லட்சம் பணத்தை அவர் அடையாளம் தெரியாத வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். தன்னை மோசடி செய்யப்பட்டு பணத்தை இழந்ததை அறிந்த ரித்திகா, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் டெல்லியை சேர்ந்த கோபி குமார் (42) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஜனவரி 26 அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேலும், குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட இவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மோசடிக்கு பயன்படுத்திய லேப்டாப், செல்போன், hard disk, pendrive, ATM கார்டுகள், PAN கார்டுகள் மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உங்கள் பணத்தை இழந்திருந்தால் 1930 என்ற எண்ணிலும் அல்லது www.cybercrime.gov.in இணையதள முகவரியில் புகார் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இழந்த பணத்தை மீட்டுக்கொடுக்க சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். www.cybercrime.gov.in. He assured that the cybercrime team would work to recover lost funds.

புகார்செய்

மறுமொழி இடவும்