cyber crime

கோவை மாநகர காவல்துறை சைபர் மோசடி குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

கோவை மாநகர காவல்துறை இன்று (ஜனவரி 27) தனது முகநூல் பக்கத்தில் சைபர் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், மும்பை சைபர் கிரைம் போலீசராக தன்னை அடையாளம் கூறி அடையாளம் தெரியாத நபர் மோசடி செய்வதை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ முடிவில் "கண்ணால் காண்பதும் பொய்!! காதால் கேட்பதும் பொய்!! தீர விசாரிப்பதே மெய்!!" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 என்ற தொலைபேசி எண்ணை அணுகவும், அல்லது www.cybercrime.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. www.cybercrime.in.

புகார்செய்

மறுமொழி இடவும்