Police Commissioner Distributes Aid

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு உதவிகள் வழங்கிய காவல் ஆணையர் சரவணசுந்தர் ஐபிஎஸ்

கோவை மாநகர காவல்துறை இன்று (ஜனவரி 28) தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் திரு. எ. சரவணசுந்தர் ஐபிஎஸ், ஜாயின் இன்டர்நேஷனல் டிரேடர்ஸ் சார்பாக, திருமதி புவனா மற்றும் நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் திரு. வினோத் நரசிம்மர் ஆகியோரின் உதவியுடன்,

கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் இதர தேவையான உதவிகளை வழங்கினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புகார்செய்

மறுமொழி இடவும்