WhatsApp Image 2024 09 25 at 20.41.33 17a4a994

கோவை மாவட்டத்தில் தேய்ப்பு பெட்டி தேவைப்படும் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்-ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், சலவை தொழில் மேற்கொள்ளும் ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக சமையல் எரிவாயுவால் இயங்கும், தேய்ப்பு பெட்டிகளை வழங்க, தமிழக அரசு முன்வந்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல இன மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக, இத்துறை வாயிலாக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சலவைத் தொழிலை மேற்கொள்ளும், ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, சமையல் எரிவாயு பயன்படுத்தி இயக்கப்படும், தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சலவைத் தொழிலில் ஈடுபடுவோர் விண்ணப்பிக்கலாம்.

குடும்ப ஆண்டு வருவாய், ரூ. 1 லட்சம். விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்செய்

மறுமொழி இடவும்