கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 1 அப்பநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள ஈஸ்வரா சக்தி நகர் மற்றும் VG ஹாஸ்பிடல் பின்புறம் உள்ள திருமுருகன் நகர், PMP வசந்தம், SP நகர், பார்க் அவென்யூ ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியை மூன்று மாத காலமாக மூடாமல் மற்றும் பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் அந்த சாலையில் பயணிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் இன்று (அக்டோபர்.15) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் தங்களின் குறைகளை கூறினர். பின்னர் அவற்றை சரி செய்து தருவதாக உறுதி கூறினார்.
உடன் மாநகராட்சி 1-வது வார்டு வட்டக் கழக செயலாளர் சாந்திபூஷன், துடியலூர் பகுதி கழகச் செயலாளர் வனிதாமணி, 15-வது வார்டு வட்டக் கழக செயலாளர் சுரேஷ் குமார், கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஒண்ணாவது வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.