Christoper nolan upcoming movie

இது நம்ம லிஸ்டில் இல்லையே! டாம், ஜெண்டயா மற்றும் நோலன் கூட்டணி

ஹாலிவுட் திரை உலகத்தில் ‘தி மேஜிக்மேன்’ என பெயர் கொண்ட இயக்குனர் ‘கிறிஸ்டோபர் நோலன்’. இவர் இயக்கிய படங்கள் அனைத்தும், ஹாலிவுட் திரை உலகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், பல விருதுகளையும் அள்ளி குவித்தது.

இவரின் முதல் படமான ‘இன்சோம்னியா’ (Insomnia), மாறுப்பட்ட திரைக்கதையின் மூலம் கிறிஸ்டோபர் நோலன் பெயரை தீப்பொறி போல் உலக முழுவதும் பரவ தொடங்கியது. அதிலும் ‘மெமென்டோ’ (Memento) படம் இவருக்கு அடித்த ஜாக்பாட் தான். பல விருதுகளை வென்று ஒட்டுமொத்த திரைஉலகத்தையும் புரட்டி போட்டு விட்டது. இப்படத்தின் திரைக்கதையை இவர் அணுகியிருந்த விதம், ஹாலிவுட் திரைப்பயணத்தை உலக முழுவதும் பேசும் பொருளாக உருவெடுக்க வைத்தது.

2000-ம் ஆண்டில் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. திரையரங்குகள் அனைத்திலும் ரசிகர்கள் அலைமோதினர். ‘மெமென்டோ’ படத்தின் மூலம் கிறிஸ்டோபர் நோலன் உலகளவில் புகழ்பெற்று, ஆல் டைம் தி கோட் இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

மெமென்டோ படம் ‘தி பெஸ்ட் ஸ்கிரீன் பிளே ரைட்டர் மற்றும் ‘தி பெஸ்ட் கேரக்டர் ஸ்கெட்ச்’ , தி பெஸ்ட மோஷன் பிக்சர்ஸ், என பல பிரிவுகளில் விருதுகளை அள்ளி குவித்தது. இப்படம் உலக சினிமா தரத்தில் முக்கிய படமாக நிலைப்பெற்று தனக்கான ஓர் இடத்தை அலங்கரித்தது.

அதே போல் இவர் இயக்கிய காமிக்ஸ் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘தி மேட்மேன் டீரியோலஜி’. இவ்வகை திரை படங்கள் உலக மக்களை கவர்ந்தது. அதிலும் இப்படத்தில் ‘ஜோக்கர்’ கேரக்டர் மக்களை பிரமிக்கவைத்தது மட்டுமில்லாமல், அவர்களின் மனதில் ‘ஆல்டைம் தி பெஸ்ட வில்லன்’ கதாபாத்திரம் என்று பெயர் பெற்றது. அதிலும் சினிமாவின் IMDB டாப் 5 இல் 3 வது இடத்தை பெற்று, சினிமாவின் இயக்குனர்களுக்கு ஆல்டைம் தி பெஸ்ட் படமாக உருவாகியது. தி ஜோக்கர் கேரக்டர் ‘தி பெஸ்ட் வில்லன்’ என்ற பிரிவில் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது.

Catch all joker scenes in the 45 mins video below..

ஆஸ்காரை முத்தமிட்ட ஓப்பன் ஹெய்மர்

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ஓப்பன் ஹெய்மர்’ (Oppenheimer). ஓப்பன் ஹெய்மர் கேரக்டரில் சிலியன் மர்பி (Cillian Murphy) நடித்தார். இப்படம் ஆஸ்காரை குறிவைத்து 7 விருகளை அள்ளியது. இதனையடுத்து கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில், மேட் டாமன் (Matt Damon) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் முன்னதாக நோலன் இயக்கத்தில் 2014-ல் வெளியான ‘இன்டர்ஸ்டெல்லர்’ (Interstellar) மற்றும் ‘ஓபன் ஹெய்மர்’ போன்ற படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து பிரபலமானவர்.

கைகோர்த்த டாம் மற்றும் நோலன்

மேலும், ‘ஸ்பைடர் மேன்’ என்ற படத்தில் நடித்து வசூல் நாயகனாக உருவெடுத்த டாம் ஹாலண்டும் (Tom Holland) இப்படத்தில் நடிக்கிறார். இது கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடிக்கும் முதல் படமாகும். யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நோலன் மனைவி எம்மா தாமஸ் (Emma Thomas) இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி iMax சில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் அன்னே ஹாத்வே (Anne Hathaway) மற்றும் ஜெண்டயா (Zendaya) இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்னா ஹாத்வே இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘இன்டர்ஸ்டெல்லர்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்செய்

மறுமொழி இடவும்