கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 58வது ஆண்டு தின கொண்டாட்டத்தை 'வெர்டன்ட் வேகா' என்ற பெயரில் பள்ளி வளாகத்தில் (ஜனவரி.23) கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஹரி தலைமை விருந்தினராகவும், RID 3201 ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுந்தரவடிவேலு கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
மேலும் சாய் பல்லவி, முன்னாள் மாணவி மற்றும் திரைப்பட நடிகை ஆகியோர் நட்சத்திர விருந்தினராக கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.