Image from Amaran Tamil movie

பட்டைய கிளப்பும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.. 150 கோடிக்கு செக்கு வைக்கும் அமரன்!

அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும், அவரது காதல் மனைவி இந்து ரெபேகா வர்கிஸாக சாய் பல்லவியும் இப்படத்தில் முத்திரை பதித்து அட்டகாசமாக நடித்துள்ளனர். வீர மரணம் அடைந்த முன்னாள் இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் அமரன்.

இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் படத்திற்கான புக்கிங் ஓபன் ஆனதில் இருந்தே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது . நடப்பாண்டில் இதுவரை வெளியான படங்களிலேயே புக் மை ஷோ பக்கத்தில் அதிக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட இரண்டாவது தமிழ் படம் என்ற பெருமையப் பெற்று தந்துள்ளது. படம் வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் கடந்த நிலையில் படத்தின் முதல் நான்கு நாள் வசூல் குறித்து பாக்கலாம்.

அமரன் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசை அசுரன் ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படம் ஏற்கனவே கூறியதைப்போல் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்கள்

இது மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களைக் கணக்கில் கொண்டால் இந்தியா முழுவதும் சுமார் 1000 முதல் 1200 தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே கூறியதைப்போல், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் முதல் நாள் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே இருந்தது. இதனால் முதல் நாளில் அமரன் படம் உலகம் முழுவதும் வெளியாகி அதிரி புதிரியாக 42.3 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்ததுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

அதேபோல் படத்திற்கு நேற்று வரை அதாவது நவம்பர் 4 ஆம் தேதி வரை பல திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தது. இதனால் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் எந்தவித தொய்வில்லாமல் வசூலில் பட்டை கிளப்பியது. அதன்படி பார்த்தால், படம் நான்கு நாட்களில் சுமார் ரூபாய் 130 கோடிகளில் இருந்து ரூபாய் 135 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

முதல் நான்கு நாட்களில் படம் இந்தத் தொகையை வசூல் செய்திருப்பதால், படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் ஏற்கனவே குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டதால், இன்றும் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை அசால்ட்டாக விரைவில் எகிர அடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

புகார்செய்

மறுமொழி இடவும்