amrita college

குளத்துப்பாளையத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை அமிர்தா கல்லூரி மாணவர்கள்

ஜனவரி 20, 2025 அன்று, கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள், அவர்களின் கிராமப்புற பயிற்சியின் திட்டத்தின்கீழ், குளத்துப்பாளையத்தில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக திணை சாகுபடிக்கு மாறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், கால்நடைகளுக்கு தரக்கூடிய தீவன அளவுகள், சுத்தமான பால் உற்பத்தி செய்வதற்க்கான வழிமுறைகள், இயற்கையாக மடிநோய் மற்றும் கால்சியம் காய்ச்சலை குணப்படுத்தும் வழிமுறைகளை விளக்கினர்.

அதன்பிறகு, தேங்காய் மற்றும் பாலில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பற்றியும் கூறினர். இதனை விவசாயிகளும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். அவர்கள் சந்தேகங்களுக்கு மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில், பேராசிரியர்கள் முனைவர் சிவராஜ், முனைவர் சத்யப்பிரியா, முனைவர் ரீனா மற்றும் முனைவர் நவீன் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

புகார்செய்

மறுமொழி இடவும்