Bhakyaraj Welfare

பாக்யராஜ் நற்பணி மன்றத்தின் 43-வது ஆண்டு விழா

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா வளாகத்தில் கோவை மாவட்டம் பாக்யராஜ் நற்பணி மன்றத்தின் 43-வது ஆண்டு விழா நிகழ்ச்சி ஜனவரி 26 அன்று நடைபெற்றது.

இதில் விருந்தினராக பிரபல திரைப்பட நடிகர் கே.பாக்யராஜ் மற்றும் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான பிரதீப் ஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பார்வையற்றோருக்கு மளிகை பொருட்களையும், பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்களையும் வழங்கினர்.

பின்னர் ரசிகர்களிடம் பேசிய நடிகர் பாக்யராஜ், தனது முதலாவது இயக்கமான சுவர் இல்லாமல் சித்திரங்கள் திரைப்படத்தின் போது எதிர்மறையாக பேசப்பட்ட சம்பவங்களை நினைவுகூர்ந்தார். “நான் வாழ்க்கையில் சந்தித்த சிரமங்களை வைத்து தான் சினிமாவை எடுக்கிறேன்,” என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “வாழ்க்கையில் என்ன வருகிறது, அது தான் சினிமாவிலும் வரும். சினிமாவில் என்ன வருகிறதோ, அது தான் வாழ்க்கை.”

புகார்செய்

மறுமொழி இடவும்