கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசியல் மற்றும் சமூக அறிவியல் சார்பில் "பிரிட்ஜிங் கவர்னன்ஸ்: கோயமுத்தூர் பஞ்சாயத்துகள் மற்றும் பழங்குடியினர் தலைமைத்துவம்" என்ற நிகழ்ச்சி இன்று (27.01.2025) நடைபெற்றது. கூடலூர் பேரூராட்சி தலைவர் அறிவரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அவர் பஞ்சாயத்து நிர்வாகத்தின் முக்கியத்துவத்தையும் பழங்குடியினரை தலைமைத்துவப்படுத்துவதின் அவசியத்தையும் பற்றி பேசினார். பகுதி பரளிகாடு மழைவாழ் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பாலமலை மழைவாழ் மக்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி ஒலித்தெழுந்து அனைவரையும் ஈர்க்கும் வகையில் நடத்தப்பட்டது