citu transport

கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய போக்குவரத்து ஊழியர்கள் கைது

திமுக அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட CITU போக்குவரத்து தொழில் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் CITU போக்குவரத்து தொழில் சங்கம் சார்பில் DA பணபலன், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவது, மருத்துவ காப்பீடு, ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு கோவை மாவட்ட CITU-வினர் 100க்கும் மேற்பட்டோர் சிறை நிரப்பும் போராட்டத்தில் இன்று ஜன.22 ஈடுபட்டனர்.

போராடத்தில் ஈடுப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு திமுக அரசை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்