Coimbatore Collector

லோக்சபா தேர்தல் பணியை சிறப்பாக செய்ததற்காக, கோவை கலெக்டர் கிராந்தி குமாருக்கு விருது

லோக்சபா தேர்தல் பணி, கோவை மாவட்டத்தில் அமைதியாக நடந்தது. தேர்தல் பணியை சிறப்பாக மேலாண்மை செய்ததற்காகவும், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக, கோவை கலெக்டர் கிராந்தி குமாருக்கு விருது வழங்கப்படுகிறது.

அதன்படி வரும் 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று, சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ரவி, இவ்விருதை வழங்க இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் நேற்று ஜனவரி 22 தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

புகார்செய்

மறுமொழி இடவும்