Coimbatore Collector 1

பொள்ளாச்சி சாலைப் பணிக்கு நில எடுப்பு: இழப்பீடுக்காக கோவை அலுவலகத்தைத் தொடா்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சாலைப் பணிக்கு நில எடுப்பு செய்யப்படும் நிலையில், இழப்பீடு கோரி விண்ணப்பிப்பவா்கள் கோவை அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளும்படி ஆட்சியா் கிராந்தி குமாா் பாடி ஜன.30 அறிவுறுத்தியுள்ளாா்

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி வட்டம் தேசிய நெடுஞ்சாலை 209 இல், உடுமலைப்பேட்டை அந்தியூா் எல்லையில் கோமங்கலம்புதூா் முதல் ஒக்கிலிபாளையம் ஆஞ்சனேயா் கோயில் வரை சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் நில எடுப்பு செய்துள்ளது. இந்த நில எடுப்பில் கவரப்பட்ட புலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை நில உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, நில உரிமைதாரா்கள் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை சமா்ப்பிக்கவும், விவரங்களை அறியவும் இதுவரை உடுமலைப்பேட்டையில் உள்ள நில எடுப்பு தனி வட்டாட்சியரை அணுகி வந்தனா்.

இந்நிலையில், இது தொடா்பாக அனைவரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கோவை ரெட்ஃபீல்டு, ஓம் சக்தி மருத்துவமனை பின்புறம், சவரிமுத்து செட்டியாா் வீதியில் இயங்கி வரும் நில எடுப்பு தனி வட்டாட்சியா் (நெடுஞ்சாலை திட்டங்கள்) அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு ஆவணங்களை சமா்ப்பிக்கலாம் என்றும், தேவையான விவரங்களைப் பெறலாம் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

புகார்செய்

மறுமொழி இடவும்