கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவில், கொங்குநாடு மருத்துவமனையின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜனவரி.31) நடைபெற்றது.
இதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இதில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜு, மண்டல குழு தலைவர் மீனா லோகு மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது