coimbatore municipal

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைவிற்கும் நாள் கூட்டம்: 46 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் இன்று (21.01.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 46 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 08 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 03 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 08 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 12 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 12 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 03 மனுக்களும் ஆகமொத்தம் 46 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அங்கித்குமார் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் திருமதி.அ.சுல்தானா அவர்கள், நகர்நல அலுவலர் மரு.ஏ.மோகன் நகரமைப்பு அலுவலர் திரு,குமார், மாநகர கல்வி அலுவலர் திரு.குணசேகரன், உதவி திரு.து.சு.துரைமுருகன்(மேற்கு), திருமதி.மோகனசுந்தரி (நிர்வாகம்), ஆணையர்கள் திரு.குமரன்(தெற்கு), திரு.முத்துசாமி(கிழக்கு), திரு.செந்தில்குமரன்(மத்தியம்), செயற்பொறியாளர்கள், உதவிசெயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

புகார்செய்

மறுமொழி இடவும்