கோவை மாநகரின் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே, கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனையை தடை செய்து, பல இளைஞர்களின் வாழ்வை மீட்டவர் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்.
இவரது சிறந்த சேவை மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக நிர்வாகிகள் (ஜனவரி 23) அவரது அலுவலகத்தில் சந்தித்து, காவல் கண்காணிப்பாளருக்கு விருதுகளை வழங்கி, அவரின் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்